என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » இந்தியா ஆஸ்திரேலியா ஒப்பந்தங்கள்
நீங்கள் தேடியது "இந்தியா ஆஸ்திரேலியா ஒப்பந்தங்கள்"
இந்தியா-ஆஸ்திரேலியா இடையே கல்வி, பயிற்சி மற்றும் ஆராய்ச்சி துறைகளில் இருநாட்டு உறவை வலுப்படுத்துவது தொடர்பாக 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
அடிலைடு:
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் அரசு முறை பயணமாக ஆஸ்திரேலியா சென்றுள்ளார். அங்கு அந்த நாட்டு கல்வி மந்திரி சைமன் பிர்மிங்காமை அடிலைடில் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதில் இருநாட்டு கல்வி நிறுவனங்களின் பரஸ்பர பங்களிப்பு, பள்ளிக்கல்வி கொள்கையில் ஒத்துழைப்பு, ஆன்லைன் கல்வி, திறன் மேம்பாடு, தொழிற்கல்வி மற்றும் பயிற்சி உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றன. பொருளாதார வளர்ச்சிக்கான சவால்களை எதிர்கொள்வதில் கல்வி மற்றும் திறன் பயிற்சிக்கான முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் தங்கள் பேச்சுவார்த்தையில் வலியுறுத்தினர்.
பேச்சுவார்த்தையின் முடிவில் கல்வி, பயிற்சி மற்றும் ஆராய்ச்சி துறைகளில் இருநாட்டு உறவை வலுப்படுத்துவது தொடர்பாக 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதில் முதல் ஒப்பந்தத்தில் ஜம்மு மத்திய பல்கலைக்கழகமும், ஆஸ்திரேலியாவின் டீக்கின் பல்கலைக்கழகமும் கையெழுத்து போட்டன. இதைப்போல கர்ட்டின் பல்கலைக்கழகம், கவுகாத்தி ஐ.ஐ.டி. இடையேயும், தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சில், மேற்கு சிட்னி பல்கலைக்கழகம் இடையேயும் ஒப்பந்தங்கள் போடப்பட்டன.
சைமன் பிர்மிங்காமுடனான பேச்சுவார்த்தை பயனுள்ளதாக இருந்ததாக கூறிய பிரகாஷ் ஜவடேகர், இது இருநாட்டு கல்வி ஒத்துழைப்பை புதிய மட்டத்துக்கு எடுத்துச்செல்லும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

×

X